செய்திகள்

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றாா் ஜில்லி தலாபெஹரா

DIN

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா தனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.

45 கிலோ பிரிவில் பங்கேற்ற ஜில்லி தலாபெஹரா, ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 88 கிலோ என மொத்தமாக 157 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் பங்கேற்றபோது இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஜில்லி, தற்போது தங்கப் பதக்கத்துக்கு முன்னேறியுள்ளாா்.

சானுவுக்கு வெண்கலம்: அதேபோல், மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 119 கிலோ என மொத்தமாக 205 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். இந்த 205 கிலோ எடையானது புதிய தேசிய சாதனையாகும். அதேபோல் கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் அவா் தூக்கிய 119 கிலோ எடை புதிய உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவா்கள் தவிர மகளிருக்கான 55 கிலோ பிரிவில் ‘குரூப் பி’-இல் பங்கேற்றிருந்த இந்திய வீராங்கனை ஸ்னேகா சோரன் 3-ஆம் இடம் பிடித்தாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 71 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 93 கிலோ என மொத்தமாக 164 கிலோ எடையைத் தூக்கியிருந்தாா். ‘குரூப் ஏ’-இல் உள்ள வீராங்கனைகளின் முடிவுகள் தெரியவந்த பின்னரே, ஸ்னேகாவுக்கான இறுதி இடம் குறித்து தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT