செய்திகள்

விராட் கோலி சொன்ன அறிவுரை: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அஸாம்

DIN

பாகிஸ்தான் அணிக்காக 31 டெஸ்ட், 80 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 26 வயது பாபர் அஸாம். 

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நீண்ட நாளாக முதல் இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பாபர் அஸாம். கடந்த 1258 நாள்களாக அதாவது 41 மாதங்களாக முதல் இடத்தில் இருந்த கோலி இதனால் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் அவர் செலுத்திய ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 103, 31, 94 ரன்கள் எடுத்து அசத்தினார் பாபர் அஸாம். இதையடுத்து ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஒருநாள் தரவரிசையில் ஜாகீர் அப்பாஸ், மியாண்டட். முகமது யூசுப் ஆகியோருக்கு அடுத்து முதலிடம் பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நெ.1 வீரராக ஆன பிறகு சக வீரர் இமாம் உல் அஹ் உடனான உரையாடலில் விராட் கோலி தனக்குக் கூறிய அறிவுரை பற்றி பாபர் அஸாம் தெரிவித்ததாவது:

முன்பெல்லாம் வலைப்பயிற்சியில் தீவிரமாக நான் ஈடுபட மாட்டேன். வலைப்பயிற்சியில் சரியாக நான் விளையாடாமல் போனால் மைதானத்தில் மட்டும் எப்படிச் சரியாக விளையாடுவேன்?

இதுபற்றி விராட் கோலியிடம் ஒருமுறை பேசினேன். ஆட்டத்தில் விளையாடுவதுபோல வலைப்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபடும்படி எனக்கு அவர் யோசனை சொன்னார். வலைப்பயிற்சியின்போது மோசமான ஷாட்டால் ஆட்டமிழந்தால் மைதானத்தில் விளையாடும்போதும் அதேபோல ஆட்டமிழக்க வாய்ப்புண்டு என்றார். அவருடைய இந்த அறிவுரை எனக்கு மிகவும் உதவியது. இதற்குப் பிறகு வலைப்பயிற்சியில் சரியாக விளையாடவில்லையென்றால் அது என்னை மிகவும் தொந்தரவு செய்யும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT