செய்திகள்

ரிஷப் பந்த் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு

15th Apr 2021 09:24 PM

ADVERTISEMENT

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்களாக கிறிஸ் மாரிஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், முஸ்தபிஸூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரபாடா, கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இருவரும் சரியான துவக்கம் அளிக்கவில்லை. பிரித்வி ஷா 2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் கேப்டன் ரிஷப்பந்தை தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ரிஷப்பந்த் 51(32 பந்துகள்) ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. 

ADVERTISEMENT

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக உனகட் 3, முஸ்தபிஸூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT