செய்திகள்

அதிரடி ஆட்டத்தால் தெ.ஆ. பந்துவீச்சைத் திணறடித்த பாபர் அஸாம்: டி20 ஹைலைட்ஸ் விடியோ

DIN

பாபர் அஸாமின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை பாகிஸ்தான் அணி எளிதாக வென்றது.

தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 31 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், மலான் 40 பந்துகளில்  2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், வான் டெர் டுசன் 20 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அஸாம் - முகமது ரிஸ்வான் ஜோடி அதிரடியாக ஆட, அந்த அணியின் வெற்றி எளிதானது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பாபர் அஸாம் 49 பந்துகளில் சதமடித்தார். அவர் 59 பந்துகளில் 4 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. முகமது ரிஸ்வான் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73, ஃபகர் ஸமான் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டி20 ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT