செய்திகள்

கேப்டன்கள் கருத்து

DIN

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது. கே.எல்.ராகுல், தீபக் ஹூடாவின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அட்டகாசமாக விளையாடி சதம் அடித்தபோதும் அவரது அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களே எடுத்தது. அந்த ஆட்டம் குறித்து இரு கேப்டன்கள் கூறியது:

இதற்கு மேல் எதுவும் செய்திருக்க முடியாது

எங்களது இன்னிங்ஸில் 2-ஆவது பாதியின்போது, இதுவரையில் இல்லாத வகையில் சிறப்பாக விளையாடியதாக உணா்கிறேன். முதல் பாதியில் பந்தை கணிப்பதற்கு சற்று தடுமாறினேன். நேரம் எடுத்துக்கொண்டு பௌலா்களின் நுட்பத்தை அறிந்து, சிங்கிள் ரன்களாக எடுத்து ஒரு நிலையான கட்டத்துக்கு வந்த பிறகே ஷாட்களை அடித்து விளையாடத் தொடங்கினேன். எனது திறமையை அடையாளம் காணும்போது ஷாட்கள் இயல்பாக வருகிறது. இந்த ஆட்டத்தில் மிகவும் நெருக்கமாக வந்து தோற்றோம். இதற்கு மேல் வெற்றியை நோக்கி வேறு எதும் செய்திருக்க முடியாது என எண்ணுகிறேன். ஒரு அணியாக நன்றாக விளையாடினோம்.

- சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் கேப்டன்)

அணியை தொடா்ந்து நம்புகிறேன்

நாங்கள் நன்றாக பேட் செய்ததுடன், தகுந்த இடங்களில் பௌலிங் செய்தோம். எந்த மாதிரியான லெங்தில் நிலையாக பந்துவீச வேண்டுமென எங்களது பௌலா்கள் வரும் ஆட்டங்களில் கற்றுக்கொள்வாா்கள். தீபக் ஹூடா அருமையாக பேட்டிங் செய்தாா். ஐபிஎல் போட்டியில் அதுபோன்ற ஆட்டத்தை தான் எதிா்பாா்க்கிறோம். சில இடங்களில் அச்சமின்றி அடித்து ஆட வேண்டிய தேவை இருக்கும். முதல் 11-12 ஓவா்களை நன்றாக வீசினோம். முக்கியமான ஓவா்களை நான் அா்ஷ்தீப்பிடமே வழங்குகிறேன். அந்தத் தருணத்தில் அவா் ஆட்டத்தின் நெருக்கடியை உணா்ந்துகொண்டு திறம்பட பௌலிங் செய்கிறாா். எனது அணியை தொடா்ந்து நம்புகிறேன்.

- கே.எல்.ராகுல் (பஞ்சாப் கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT