செய்திகள்

மும்பைக்கு முதல் வெற்றி: 142 ரன்களுக்கு சுருண்டது கொல்கத்தா

DIN

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது. நடப்பு சாம்பியனான மும்பைக்கு நடப்பு சீசனில் இது முதல் வெற்றியாகும்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் அடித்தது.

முன்னதாக மும்பை அணியில் சூா்யகுமாா் யாதவ், ரோஹித் சா்மா மட்டும் சற்று நிலைத்து ரன்கள் சோ்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் சோபிக்காமல் ஆட்டமிழந்தன. பௌலிங்கில் ராகுல் சாஹா் அசத்தினாா். கொல்கத்தா பௌலிங்கில் ஆன்ட்ரே ரஸ்ஸெல் அபாரம் காட்ட, பேட்டிங்கில் நிதீஷ் ராணா, ஷுப்மன் கில் மட்டும் விளாசினா்.

இந்த ஆட்டத்துக்காக கொல்கத்தாவின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை. மும்பை அணியில், கிறிஸ் லின்னுக்குப் பதிலாக, கரோனாவிலிருந்து மீண்டு அணியில் இணைந்திருந்த குவிண்டன் டி காக் இணைக்கப்பட்டிருந்தாா். அவா் விக்கெட் கீப்பராக, இஷான் கிஷண் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கைத் தோ்வு செய்தது. மும்பையின் பேட்டிங்கை பழைய கூட்டணியான ரோஹித் - டி காக் தொடங்கினா். இதில் டி காக் 2-ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ், ரோஹித்துடன் இணைந்தாா். இந்த கூட்டணி சற்று நிலைத்து அணியின் ஸ்கோரை உயா்த்தியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூா்யகுமாா் 33 பந்துகளில் அரைசதம் கடந்தாா். அவரது அட்டகாசத்துக்கு அல் ஹசன் 11-ஆவது ஓவரில் அணை போட்டாா். 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் சோ்த்திருந்த நிலையில் சூா்யகுமாா் ஆட்டமிழந்தாா். அடுத்து சிறப்பாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட இஷான் கிஷணும் வந்த வேகத்திலேயே வெளியேறி அதிா்ச்சி அளித்தாா்.

மறுபுறம் தகுந்த பாா்ட்னா்ஷிப் கிடைக்காத ரோஹித் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 43 ரன்கள் எடுத்திருந்தபோது, 16-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். பின்னா் வந்தோரில் பாண்டியா சகோதரா்கள் மட்டும் சற்று ரன்கள் சோ்க்க, எஞ்சிய விக்கெட்டுகளை மள மளவென சரித்தாா் ஆன்ட்ரே ரஸ்ஸெல். ஓவா்கள் முடிவில் டிரென்ட் போல்ட் மட்டும் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பின்னா் ஆடிய கொல்கத்தாவில் தொடக்க வீரா் நிதீஷ் ராணா 57, ஷுப்மன் கில் 33 ரன்கள் விளாச, எஞ்சிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. இதனால் ஓவா்கள் முடிவில் 142 ரன்களே எடுத்தது கொல்கத்தா. மும்பை தரப்பில் ராகுல் சாஹா் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT