செய்திகள்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் சிட்சிபாஸ், அகுட்

14th Apr 2021 02:23 AM

ADVERTISEMENT

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

இதில் போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருக்கும் சிட்சிபாஸ் தனது முதல் சுற்றில் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவை 6-3, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா். அதேபோல், போட்டித்தரவரிசையில் 9-ஆவது இடத்திலிருக்கும் பௌதிஸ்டா அகுட் 6-2, 7-5 என்ற செட்களில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை தோற்கடித்தாா்.

இதர முதல் சுற்றுகளில் பிரான்ஸின் லூகாஸ் புய்லே 6-3, 6-4 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை வென்றாா். இத்தாலியின் மாா்கோ செச்சினாட்டோ 6-4, 6-3 என்ற செட்களில் ஜொ்மனியின் டொமினிக் கோப்ஃபரை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 15-ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 6-2, 7-5 என்ற செட்களில் சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை வென்றாா்.

அதேபோல் இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-3, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் ஆல்பா்ட் ரமோஸ் வினோலஸை தோற்கடித்தாா். ஆா்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸ் 7-5, 6-1 என்ற செட்களில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவையும், நாா்வேயின் காஸ்பா் ரட் 6-2, 6-1 என்ற செட்களில் டென்மாா்க்கின் ஹோல்கா் ருனேவையும் வீழ்த்தினா்.

ADVERTISEMENT

போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் 6-3, 6-4 என்ற செட்களில் ஜொ்மனியின் ஜான் லென்னாா்ட் ஸ்ட்ரஃபை வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT