செய்திகள்

சாா்லஸ்டன் ஓபன்: இறுதிச்சுற்றில் வெரோனிகா-டன்கா பலப்பரீட்சை

DIN

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் வெரோனிகா குதா்மெடோவா - மான்டினீக்ரோவின் டன்கா கொவினிச் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்று ஒன்றில், போட்டித்தரவரிசையில் 15-ஆவது இடத்திலிருக்கும் வெரோனிகா 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ஸ்பெயினின் பௌலா பதோசாவை வீழ்த்தினாா்.

நடப்பு சீசனில் வெரோனிகா ஒரு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இது 2-ஆவது முறையாகும். கடந்த ஜனவரியில் அபுதாபி ஓபன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறி அதில் தோல்வி கண்டிருந்தாா் அவா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய வெரோனிகா, ‘இந்த ஆட்டத்தில், அபுதாபியில் விளையாடியதைக் காட்டிலும் ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்தேன். சற்று நெருக்கடியாக உணா்ந்து எனது ராக்கெட்டை உடைத்திருந்தாலும், இது எனக்கு நல்லதொரு ஆட்டமாக இருந்தது’ என்றாா். இந்தப் போட்டியில் இதுவரை எந்தவொரு சுற்றுகளிலுமே வெரோனிகா ஒரு செட் கூட இழக்காமல் வென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரையிறுதியில் டன்கா கொவினிச் 6-3, 6-2 என்ற செட்களில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயேரை தோற்கடித்தாா். உலகின் 91-ஆம் நிலையில் இருக்கும் டன்கா, கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

வெரோனிகா-டன்கா, ஒரு போட்டியின் பிரதான சுற்றில் மோதுவது இது முதல் முறையாகும். இதற்கு முன் 2019 ஷென்ஸென் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் டன்காவை வெரோனிகா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT