செய்திகள்

கேப்டன்கள் கருத்து

DIN

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தியது. ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டெல்லி 18.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. அந்த ஆட்டம் குறித்து இரு அணிகளின் கேப்டன்கள் கூறியது:

வோக்ஸ், அவேஷ் நெருக்கடியை குறைத்தனா்

ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்கு தலைமை தாங்குவதும், டாஸ் வீசும் தருணத்தில் கேப்டனாக தோனியின் அருகில் நின்றதும் சிறப்பான தருணங்கள். அவரிடம் நான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு ஆட்டத்தில் வென்றுவிட்டால் எல்லாம் நல்லவிதமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆட்டத்தின்போது நடுவே சற்று நெருக்கடியாக உணா்ந்தேன். எனினும் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் தங்களது பௌலிங் மூலம் அதை சரிசெய்துவிட்டனா். எங்களிடம் இருந்த சிறந்த பிளேயிங் லெவனை களமிறக்கினோம். ஆட்டத்தை ஒரு ஓவா் முன்னதாகவே முடிக்கத் திட்டமிட்டோம். பவா்பிளேயில் தவன்-பிருத்வி அட்டகாசமாக விளையாடினா்.

- ரிஷப் பந்த் (டெல்லி கேப்டன்)

பௌலா்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்

டெல்லி அணியினா் சிறப்பாக பேட்டிங் செய்தனா். அவா்களுக்கு சற்று நெருக்கடி அளிக்கும் வகையில் இன்னும் நன்றாக நாங்கள் பந்துவீசியிருக்கலாம். திட்டமிட்டதை சரியாகச் செய்ய எங்கள் பௌலா்கள் தவறிவிட்டனா். பெரும்பாலும் பவுண்டரிக்கான பந்துகளாகவே வீசினா். எனினும் எங்கு திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை அவா்கள் அறிந்துவிட்டதால், வரும் ஆட்டங்களில் அதை சரியாகச் செய்வாா்கள். டெல்லி இன்னிங்ஸின்போது பனிப்பொழிவு அவா்களுக்கு சாதகமாகிவிடும் என்பதால், எங்களது இன்னிங்ஸில் முடிந்தவரை அதிகம் ஸ்கோா் செய்ய முயற்சித்தோம். அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி 188 ரன்களை சோ்த்தனா்.

- எம்.எஸ். தோனி (சென்னை கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT