செய்திகள்

தோனியிடம் டிராவிட் கோபப்பட்டார்: சேவாக்

11th Apr 2021 05:44 PM

ADVERTISEMENT


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் ஒருமுறை மகேந்திர சிங் தோனி மீது கோபப்பட்டதாக முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராகுல் டிராவிட் நடிப்பில் வெளியான விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் டிராவிட் ஆத்திரத்துடன் வசனம் பேசுகிறார்.

இந்த நிலையில் டிராவிட் கோபப்பட்டு பார்த்திருப்பதாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம் சேவாக் கூறியிருக்கிறார். 

சேவாக் கூறியது:

ADVERTISEMENT

"டிராவிட் கோபப்பட்டு நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பாகிஸ்தான் சென்றபோது எம்எஸ் தோனி அணியில் புதிய வீரர். அவர் ஒரு ஷாட் ஆடி, பாயிண்ட் திசையில் கேட்ச் ஆனார். தோனி மீது டிராவிட் கடுமையான கோபம் கொண்டார். 'இப்படித்தான் விளையாடுவாயா, நீ ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும்.' என கோபப்பட்டார். அவர் ஆங்கிலத்தில் திட்டியது எனக்குப் பாதி புரியவில்லை. 

அடுத்த முறை தோனி பேட் செய்ய வந்தபோது நிறைய ஷாட்களை விளையாடவில்லை. அவரிடம் சென்று ஏன் எனக் கேட்டேன். அதற்கு அவர் கூறினார், மீண்டும் டிராவிட்டிடம் திட்டு வாங்க முடியாது. நான் ஆட்டத்தை மெதுவாக முடித்துவிட்டு செல்கிறேன் என தோனி கூறினார்" என்றார் சேவாக்.

Tags : dhoni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT