செய்திகள்

'இது உன்னுடைய அணி ரிஷப்': டெல்லி வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பாண்டிங்

7th Apr 2021 10:42 PM

ADVERTISEMENT


14-வது ஐபிஎல் சீசனுக்காக டெல்லி கேபிடல்ஸ் வீரர்களுடன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முதன்முறையாக பேசிய விடியோவை அந்த நிர்வாகம் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

14-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதனால், புதிய கேப்டன் ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது.

டெல்லி அணி முதல் ஆட்டத்தில் களமிறங்க இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வீரர்களை முதன்முதலாகச் சந்தித்து ஊக்கமளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

அந்த விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர், "நான் முதன்முதலில் டெல்லி அணிக்கு வந்தபோது கடைசி இடம் பிடித்தது. அதற்கு அடுத்த ஆண்டு 3-வது இடம். கடந்தாண்டு 2-வது இடம். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த டெல்லி அணி அல்ல இது. அதற்குக் காரணம் இந்த அணிக்கு நீங்கள் அளித்த பங்களிப்பு. பயிற்சியாளர்கள் நாங்கள் அல்ல. இது உனது அணி. இது முழுமையாக உனது அணி ரிஷப் (பந்த்)" என்று தொடங்கினார்.

இதையடுத்து, வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், அணிக்குத் தேவையான விஷயங்களையும் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்.

 

Tags : Delhi Capitals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT