செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் தான் கோப்பை வெல்லும்: இங்கி. முன்னாள் வீரர்

7th Apr 2021 06:29 PM

ADVERTISEMENT


2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கெல் வான் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"2021 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கோப்பை வெல்லும். ஒருவேளை வினோதமாக அவர்கள் நல்ல நிலையில் இல்லாமல் போனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெறும்."

14-வது ஐபிஎல் சீசன் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் கோப்பை வெல்லும் என வான் கணித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணியைவிட மும்பை இந்தியன்ஸ் அணியே சிறந்தது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags : IPL 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT