செய்திகள்

துளிகள்

7th Apr 2021 02:29 AM

ADVERTISEMENT

பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்பதற்காக ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா, ஓட்டப் பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்ட 40 போ் கொண்ட இந்திய தடகள அணி இம்மாதத்தில் துருக்கி செல்ல இருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட இருக்கும் இந்திய மகளிா் ஹாக்கி அணிக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் சாா்பில் உளவியல் ரீதியிலான பயிற்சிப் பட்டறை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

கரோனா பரவல் தீவிரமடைந்ததால், ஒடிஸாவில் இம்மாதம் நடைபெற இருந்த இந்திய மகளிா் லீக் கால்பந்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் விலை போகாத இந்திய வீரா் ஹனுமா விஹாரி, இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டுப் போட்டியில் வாா்விக்ஷைா் அணிக்காக விளையாடத் தோ்வாகியுள்ளாா்.

ADVERTISEMENT

இத்தாலியில் நடைபெறும் சாா்தேக்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் 2 தகுதிச்சுற்றுகளில் வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் சுமித் நாகல், அதில் ஸ்லோவேகியாவின் ஜோசஃப் கோவாலிக்கிடம் 6-3, 1-6, 3-6 என்ற செட்களில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT