செய்திகள்

மியாமி ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

1st Apr 2021 03:59 AM

ADVERTISEMENT

 

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மெத்வதேவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை 6-4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார். இதையடுத்து மெத்வதேவ் தனது காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலுள்ள ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட்டை எதிர்கொள்கிறார். முன்னதாக பெளதிஸ்டா தனது முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை 6-3, 4-6, 7-6, (9/7) என்ற செட்களில் தோற்கடித்திருந்தார். 

மற்றொரு ரஷிய வீரரான ஆன்ட்ரே ருபலேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர் உலகின் 87-ஆம் நிலையிலுள்ள அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதுகிறார். 

ADVERTISEMENT

அதிர்ச்சி அளித்த கோர்டா: முன்னதாக கோர்டா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்திலிருந்த ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை 6-3, 4-6, 7-5 என்ற செட்களில் அவருக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார். வெற்றிக்குப் பிறகு பேசிய கோர்டா, "இன்றைய எனது ஆட்டம் அற்புதமாக இருந்ததாக உணர்கிறேன். இக்கட்டான தருணங்களிலும் அமைதியான மனநிலையுடன் நிதானமாக விளையாடினேன்' என்றார். 

போட்டித்தரவரிசையில் 26-ஆவது இடத்திலிருக்கும் ஹியுபர்ட் ஹர்காக்ஸ் 4-6, 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருந்த கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தினார். ஹர்காக்ஸ் தனது காலிறுதியில், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாûஸ எதிர்கொள்கிறார். 

மேலும் இரு 4-ஆவது சுற்றுகளில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-2 என்ற செட்களில் ஃபின்லாந்தின் எமில் ருசுவோரியையும், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக் 6-7 (5/7), 6-3, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ûஸயும் வீழ்த்தினர். இதையடுத்து காலிறுதி ஒன்றில் சின்னர்-பப்லிக் மோதுகின்றனர். 


அரையிறுதியில் பர்ட்டி

மியாமி ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவர், தனது காலிறுதியில் போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்காவை 6-4, 6-7 (5/7), 6-3 என்ற செட்களில் வென்றார். 

பர்ட்டி தனது அரையிறுதிச்சுற்றில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொள்கிறார். முன்னதாக எலினா 6-3, 6-2 என்ற செட்களில் லாத்வியாவின் அனஸ்தாசிஜா செவஸ்டோவாவை வென்றார். அரையிறுதி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் ஆஷ்லி பர்ட்டி, உலகின் முதல்நிலை வீராங்கனையாக தன்னை மீண்டும் தக்கவைத்துக் கொள்வார். எனினும், தரவரிசை குறித்து தாம் யோசிக்கவில்லை என்றும், ஆட்டத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்வதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT