செய்திகள்

ஐபிஎல்: சிஎஸ்கே வீரர் ஹேசில்வுட் விலகல்

1st Apr 2021 05:45 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே வீரர் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

30 வயது ஹேசில்வுட், ஆஸ்திரேலிய அணிக்காக 55 டெஸ்டுகள், 54 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து ஹேசில்வுட் விலகியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதம் முதல் வெவ்வேறு காலக்கட்டத்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்துள்ளேன். எனவே தற்போது ஓய்வு எடுக்க முடிவெடுத்து ஆஸ்திரேலியாவிலும் வீட்டிலும் இருக்கவுள்ளேன். அடுத்து முக்கியமான போட்டிகள் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பெரிய தொடர் உள்ளது. பிறகு வங்கதேசத்துக்கு எதிரான தொடரும் டி20 உலகக் கோப்பையும் உள்ளன. அடுத்ததாக ஆஷஸ் தொடர் உள்ளது. எனவே 12 மாதங்களுக்கு நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமையில் உள்ளேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும்போது நல்ல மனநிலையிலும் உடற்தகுதியிலும் இருக்கவேண்டும் என எண்ணுவேன். எனவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஹேசில்வுட் மூன்று ஆட்டங்களில் விளையாடினார். 

Tags : Josh Hazlewood IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT