செய்திகள்

ஐபிஎல் களம்

1st Apr 2021 03:47 AM

ADVERTISEMENT


அறுவைச் சிகிச்சை நிறைவு 

"இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் கை விரலின் உள்ளாக ஊடுருவியிருந்த கண்ணாடித் துண்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 2 வார சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு அவர் பரிசோதிக்கப்படுவார். அவர் பயிற்சிக்குத் திரும்பிய பிறகு முழங்கை காயம் குறித்த நிலை தெரியவரும்' என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதனால் ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியில் விளையாட இயலாமல் போகலாம் எனத் தெரிகிறது. 

 

கேப்டன்ஸி ரிஷப் பந்த்தை மேம்படுத்தும் 

ADVERTISEMENT

"ஷ்ரேயஸ் ஐயர் இந்தத் தொடரில் பங்கேற்காதது துரதிருஷ்டவசமானது. எனினும், ரிஷப் பந்த்துக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் காண காத்திருக்கிறோம். சமீபத்திய அவரது விளையாட்டின் அடிப்படையில் அவர் இதற்குத் தகுதியானவர். கேப்டன்ஸி அவரை மேலும் சிறந்த வீரராக மேம்படுத்தும்' என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் கூறினார். 

 

மிட்செலுக்கு பதில் ஜேசன் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு சீசனிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்குப் பதில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT