செய்திகள்

பிரத்வெயிட் சதம்: மே.இ. தீவுகள் 354

1st Apr 2021 03:55 AM

ADVERTISEMENT


நார்த் செளன்ட், மார்ச் 31: இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 354 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், முதல் நாள் முடிவில் 86 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. கிரெய்க் பிரத்வெயிட் 99, ரகீம் கார்ன்வால் 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாளின் முடிவில் 99 ரன்களுடன் நிறைவு செய்த 16-ஆவது வீரர் என்ற பெயரை பிரத்வெயிட் பெற்றார்.
பின்னர் 2-ஆம் நாள் ஆட்டத்தில் பிரத்வெயிட், மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டனாக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுபுறம், அரைசதம் கடந்த கார்ன்வால் 73 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த கெமர் ரோச் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக பிரத்வெயிட் 13 பவுண்டரிகளுடன் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2-ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 1, துஷ்மந்தா சமீரா 2 விக்கெட் சாய்த்தனர். 
இலங்கை-136/3: பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை, 2-ஆம் நாள் முடிவில் 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. தினேஷ் சண்டிமல் 34, தனஞ்செய டி சில்வா 23 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருடன் ஒப்பிடுகையில் இலங்கை 218 ரன்கள் பின்தங்கியுள்ளது. 
முன்னர் ஆடியோரில் தொடக்க வீரராக வந்த கேப்டன் திமுத் கருணாரத்னே 1 ரன்னுக்கு வெளியேற, உடன் வந்த லாஹிரு திரிமனே சற்று நிலைத்து 55 ரன்கள் சேர்த்தார். ஓஷதா ஃபெர்னான்டோ 18 ரன்கள் அடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச், அல்ஸாரி ஜோசஃப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT