செய்திகள்

துளிகள்...

1st Apr 2021 03:52 AM

ADVERTISEMENT


ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை சமீபத்தில் தோல்வியின்றி நிறைவு செய்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, எதிர்வரும் ஆர்ஜென்டீன பயணத்தையும் அவ்வாறே நிறைவு செய்வதை எதிர்நோக்கியிருப்பதாக அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறினார். அவர் தலைமையிலான அணி, புதன்கிழமை காலை ஆர்ஜென்டீனா புறப்பட்டுச் சென்றது. 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜார்க்கண்டில் வரும் 3-ஆம் தேதி தொடங்கவிருந்த ஜூனியர் மகளிர் தேசிய ஹாக்கி போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகளுக்கான உடை புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. 

பெங்களூரு மற்றும் பாட்டியாலா நகரங்களில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் 741 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 30 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சென்னையில் ஏப்ரலில் நடைபெறவுள்ள எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக 10 மகளிர் ஓட்டுநர்கள் பங்கேற்கின்றனர். 

துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் செய்த சிறப்பான பங்களிப்புக்காக இந்திய தேசிய ரைஃபிள் சங்கத்தின் இணைச் செயலர் பவன் சிங்குக்கு சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது. 

சென்னையில் நடைபெறும் எஸ்ஆர்எஃப்ஐ இந்தியன் டூர் ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் பிரிவில் எகிப்தின் ரனா இஸ்மாயில், இந்தியாவின் தன்வி கன்னா, எகிப்தின் ஹனா மெளடாஸ், எகிப்தின் மலாக் கமால் ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT