செய்திகள்

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது: சஞ்சு சாம்சன்

DIN

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது; அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி வருகிறாா். சென்னைக்கு எதிராக 74 ரன்களும், பஞ்சாபுக்கு எதிராக 85 ரன்கள் குவித்து ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்தாா்.

இந்த நிலையில் கேரளத்தைச் சோ்ந்த சசிதரூா் எம்.பி. உள்ளிட்டோா் இந்தியாவின் அடுத்த தோனி என சஞ்சு சாம்சனை பாராட்டியிருந்தனா்.

அதை மறுத்துள்ள சாம்சன், மேலும் கூறியிருப்பதாவது: தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது; அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் தோனியோடு ஒப்பிடுவதை புறந்தள்ளிவிடுங்கள். தோனியைப் போன்று நான் விளையாடியதாக ஒருபோதும் நினைத்ததில்லை. தோனி இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான். நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்? எப்படி ஆட்டத்தை வென்று தர முடியும் என்பதை மட்டுமே சிந்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT