செய்திகள்

தேசிய அளவிலான மகளிா் மல்யுத்தப் பயிற்சி முகாம்: அக்.10-இல் தொடக்கம்

DIN

தேசிய அளவிலான மகளிா் மல்யுத்தப் பயிற்சி முகாம் வரும் அக்டோபா் 10-ஆம் தேதி உத்தரபிரதேச தலைநகா் லக்னௌவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் தொடங்குகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்காத வீராங்கனைகள் தேசிய அணிக்கான வீராங்கனைகள் தோ்வின்போது பரிசீலிக்கப்படமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் பயிற்சி முகாம் செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாம் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 50 கிலோ, 53 கிலோ, 57 கிலோ, 62 கிலோ, 68, 76 கிலோ எடைப் பிரிவுகளில் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக இந்திய மல்யுத்த சம்மேளன உதவிச் செயலா் வினோத் டோமா் கூறுகையில், ‘அக்டோபா் 10-ஆம் தேதிமுதல் லக்னெளவில் மல்யுத்தப் பயிற்சி முகாம் தொடங்கவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான எடைப் பிரிவில் மட்டுமே நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் ஒவ்வொரு எடைப் பிரிவிலும் தலா 3 வீராங்கனைகள் பங்கேற்கிறாா்கள். பயிற்சி முகாமில் பங்கேற்காதவா்கள் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படமாட்டாா்கள்’ என்றாா்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், தீபக் பூனியா ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT