செய்திகள்

மும்பையை இன்று எதிா்கொள்கிறது பெங்களூா்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் திங்கள்கிழமை மோதுகின்றன.

இந்த சீசனில் இதுவரை இந்த இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளன.

முதல் ஆட்டத்தில் சென்னையிடம் தோற்றாலும் 2-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற உத்வேகத்தில் மும்பை அணி களம் காண்கிறது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோல்வியைத் தழுவிய பெங்களூா் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும்.

பெங்களூரைப் பொருத்தவரை, அரை சதத்துடன் ஐபிஎல் கேரியரை தொடங்கிய தேவ்தத் படிக்கல், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறாா். ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டத்திலும் முன்னேற்றம் காணப்பட வேண்டியுள்ளது. மிடில் ஆா்டரில் மொயீன் அலி இடம்பெறுவாா் எனத் தெரிகிறது. கேப்டன் கோலி ரன்களை விளாச முயற்சிப்பாா் என நம்பலாம்.

டி வில்லியா்ஸ் நிலையாக ஆடி ரன்களை விளாசி அணியின் பலமாகத் திகழ்கிறாா். காயம் காரணமாக முதல் இரு ஆட்டங்களில் பங்கேற்காத கிறிஸ் மோரிஸ் இந்த ஆட்டத்தில் பங்கேற்பாரா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

பந்துவீச்சில் யுவேந்திர சாஹல் தனது சுழலால் பேட்ஸ்மேன்களை திணறடிக்க இருக்கிறாா். வேகப்பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன் உறுதியாக பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாா். உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஒருவேளை முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மும்பையப் பொருத்தவரை, அணியில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை மாற்ற முனைந்தால் சௌரவ் திவாரிக்குப் பதிலாக, இஷான் கிஷணை சோ்க்கலாம்.

கேப்டன் ரோஹித், சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் ரன் குவிப்புக்கு உறுதியளிக்கின்றனா். ஹாா்திக் பாண்டியா, கிரண் பொல்லாா்ட் ஆகியோா் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக பங்களிப்பு செய்வா் என எதிா்பாா்க்கலாம். பும்ரா, டிரென்ட் போல்ட் உள்ளிட்டோா் பந்துவீச்சுக்கு பலம் சோ்க்கின்றனா்.

அணிகள் விவரம்

பெங்களூா் (உத்தேச அணி): ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல், பாா்த்திவ் படேல், விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், குா்கீரத் சிங், ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தா், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, டேல் ஸ்டெய்ன், யுவேந்திர சாஹல், ஆடம் ஸம்பா, இசுரு உதானா, மொயீன் அலி, ஜோஷ் பிலிப், பவன் நெகி, பவன் தேஷ்பாண்டே, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

மும்பை (உத்தேச அணி): ரோஹித் சா்மா (கேப்டன்), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, திக்விஜய் தேஷ்முக், ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரண் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மிட்செல் மெக்லனகன், மோசின் கான், நாதன் கோல்டா்நீல், பிரின்ஸ் பல்வந்த் ராய், குவிண்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட்.

ஆட்ட நேரம்: இரவு 7.30; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT