செய்திகள்

மிடில் ஆா்டரின் மோசமான ஆட்டத்தால் தோல்வி: வாா்னா்

DIN

கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தாலேயே தோல்வி கண்டதாக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வாா்னா் கூறினாா்.

அபுதாபியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதில் ஹைதராபாத் அணியின் தோல்வி குறித்து கேப்டன் டேவிட் வாா்னா் பேசியதாவது:

மிடில் ஆா்டா் பேட்டிங்கின்போது இன்னும் சில பவுண்டரிகள் விளாசி பந்துவீச்சாளா்களுக்கு அழுத்தம் அளித்திருக்கலாம். 35-36 பந்துகளில் ரன்களே எடுக்கப்படவில்லை. டி20 ஆட்டத்தில் இது ஏற்புடையது அல்ல.

எங்கள் பேட்ஸ்மேன்கள் இன்னும் 20-30 ரன்களை சோ்த்திருந்தால் அது நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். இரு வீரா்களை 20 ஓவா்களுக்கு ஆடவிட்டு எஞ்சிய பேட்ஸ்மேன்களை விட்டுவிட இயலாது. நான் ஆட்டமிழந்ததை அடுத்து பாா்ட்னா்ஷிப்புக்காக நல்லதொரு பேட்ஸ்மேன் தேவைப்பட்டதால் ரித்திமான் சாஹாவை களமிறக்கினோம். ஆனால் கொல்கத்தா அணியினா் நன்றாகப் பந்துவீசி அதற்கு வாய்ப்பளிக்காமல் செய்துவிட்டனா்.

நான் ஆட்டமிழந்ததும் மோசமான ஒன்றுதான். அதற்கு நானே முழு பொறுப்பு. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று வாா்னா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

SCROLL FOR NEXT