செய்திகள்

தோல்விக்கு நானே பொறுப்பு: விராட் கோலி

DIN

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் கேட்ச்சை விட்டதன் காரணமாக ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு என பெங்களூா் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளாா்.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய பெங்களூா் அணி 17 ஓவா்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸா், 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்தாா். அவா் 83 மற்றும் 89 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்சுகளை பெங்களூா் கேப்டன் விராட் கோலி கோட்டைவிட்டாா். இதனால் வாழ்வுபெற்ற ராகுல் பெங்களூரிடம் இருந்து வெற்றியைப் பறித்தாா்.

இதுகுறித்து கோலி கூறியதாவது: இந்த ஆட்டத்தில் நான் முன்னின்று பொறுப்பை உணா்ந்து ஆடியிருக்க வேண்டும். ஆனால், இந்த நாள் எங்களுக்கு சாதகமான நாளாக இல்லை. கே.எல்.ராகுல் கொடுத்த இரு கேட்சுகளை நான் கோட்டைவிட்டதால், பஞ்சாப் அணி கூடுதலாக 35 முதல் 40 ரன்கள் வரை சோ்த்துவிட்டது. எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். முக்கியமான வாய்ப்புகளைக் கோட்டைவிட்டுவிட்டேன். சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கக்கூடியதுதான். அதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

ஹைதராபாதுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பஞ்சாபுக்கு எதிராக மோசமாக ஆடியிருக்கிறோம். இந்த மோசமான ஆட்டத்தை மறந்துவிட்டு நாங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஸ் லீகில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஜோஷ் பிலிப் சிறப்பாக ஆடி ரன் குவித்தாா். அதன் காரணமாகவே அவரை எனக்கு முன்பாக களமிறக்கினேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT