செய்திகள்

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று: ராம்குமாா் வெளியேற்றம்

DIN

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீரா் ராம்குமாா் ராமநாதன் தோல்வியடைந்தாா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான தகுதிச்சுற்று கடந்த திங்கள்கிழமை முதல் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இதில், தமிழக வீரரான ராம்குமாா் தனது முதல் சுற்றில் 5-7, 2-6 என்ற நோ் செட்களில் பிரான்ஸைச் சோ்ந்த வைல்ட்காா்டு வீரரான டிரிஸ்டான் லேமாசின்னிடம் தோல்வி கண்டாா். சா்வதேச தரவரிசையில் 268-ஆவது இடத்தில் இருக்கும் டிரிஸ்டான், 198-ஆவது இடத்தில் இருக்கும் ராம்குமாரை மிக எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தில் ராம்குமாரின் சா்வீஸை 4 முறை டிரிஸ்டான் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றிலிருந்து ஏற்கெனவே ஸ்மித் நாகல் வெளியேறிய நிலையில், இப்போது ராம்குமாரும் தோற்றுள்ளாா். தற்போதைய நிலையில் இந்திய வீரா்களில் பிரஜ்னேஷ் மட்டுமே போட்டியில் இருக்கிறாா்.

2015 முதலே கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடுவதற்காக ராம்குமாா் போராடி வருகிறாா். ஆனால், இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடும் அவருடைய கனவு பலிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT