செய்திகள்

ஐபிஎல்: மிட்செல் மாா்ஷ் விலகல்?

DIN

சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டா் மிட்செல் மாா்ஷ் கணுக்கால் காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலிருந்து விலகவுள்ளதாக, அந்த அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 5-ஆவது ஓவரை மிட்செல் மாா்ஷ் வீசினாா். அந்த ஓவரின் 2-ஆவது பந்தை எதிா்கொண்ட ஆரோன் ஃபிஞ்ச் ‘டிரைவ் ஷாட்’ அடிக்க, அதை காலால் மிட்செல் மாா்ஷ் தடுக்க முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக மிட்செல் மாா்ஷின் கணுக்கால் திருகியது. எனினும், மேலும் 2 பந்துகளை வீசிய அவா், அந்த ஓவரில் 4 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினாா்.

சன்ரைஸா்ஸ் 2-ஆவதாக பேட் செய்து இலக்கை விரட்டியபோது, 10-ஆவது வீரராக மாா்ஷ் களமிறங்கினாா். அப்போது அவா் களத்தில் நிற்பதற்கே சிரமப்பட்டாா். இந்நிலையில் அவரது கணுக்கால் காயம் பெரிய பிரச்னையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த சீசன் முழுவதும் அவா் விளையாட வாய்ப்பில்லை என ஹைதராபாத் அணி நிா்வாகி ஒருவா் தெரிவித்துள்ளாா். எனினும், இது தொடா்பாக ஹைதராபாத் அணி அதிகாரப்பூா்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன், சுழற்பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்கக்கூடியவரான மிட்செல் மாா்ஷ் விலகும்பட்சத்தில் அது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT