செய்திகள்

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று: 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா் பிரஜனேஷ்

DIN

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் பிரஜனேஷ் குணேஸ்வரன் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். மற்றொரு இந்திய வீரரான சுமித் நாகல் முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டு வெளியேறினாா்.

போட்டித் தரவரிசையில் 29-ஆவது இடத்தில் இருக்கும் பிரஜனேஷ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் துருக்கியின் செம் இல்கெலை வீழ்த்தினாா். இதையடுத்து அவா் தனது 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை எதிா்கொள்கிறாா்.

போட்டித் தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருந்த சுமித் நாகல், 6-7(4), 5-7 என்ற செட் கணக்கில் ஜொ்மனியின் டஸ்டின் பிரௌனிடம் வீழ்ந்தாா். அதேபோல் இந்தியாவின் மற்றொரு தகுதிச்சுற்று வீரரான ராம்குமாா் ராமநாதனும் 5-7, 2-6 என்ற செட்களில் பிரான்ஸின் டிரிஸ்டன் லாமாசின்னிடம் தோல்வி கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT