செய்திகள்

286 வாரங்களாக முதல் இடத்தில் ஜோகோவிச்: புதிய சாதனை

DIN

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் 286 வாரங்களாக முதல் இடத்தில் இருந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

செர்பியாவைச் சேர்ந்த 33 வயது ஜோகோவிச், 2003 முதல் தொழில்முறைப் போட்டிகளில் கலந்து வருகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்களில் 3-ம் இடம். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை எட்டு முறையும் விம்பிள்டன் போட்டியை ஐந்து முறையும் யு.எஸ். ஓபன் போட்டியை மூன்று முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஒருமுறையும் வென்றுள்ளார். 

ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் 286 வாரங்கள் (தொடர்ச்சியாக அல்ல) முதல் இடத்தில் இருந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச். நெ. 1 வீரராக சாம்பிராஸ் 286 வாரங்கள் இருந்த நிலையில் அவருடைய சாதனையை ஜோகோவிச் தாண்டியுள்ளார். எனினும் அதிக வாரங்கள் முதல் இடத்தில் இருந்த பெருமை ரோஜர் ஃபெடரரிடம் உள்ளது. அவர் 310 வாரங்கள் முதலிடம் வகித்துள்ளார். 24 வாரங்களில் அச்சாதனையையும் ஜோகோவிச் தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT