செய்திகள்

உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளர் பும்ரா: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பாராட்டு

16th Sep 2020 10:25 AM

ADVERTISEMENT

 

உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளர் பும்ரா என ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பாராட்டியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் ஜேம்ஸ் பேட்டிசன் கூறியதாவது:

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுடன் இணைந்து விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளர் பும்ரா. டிரெண்ட் போல்டும் அதற்கான திறமையைக் கொண்டவர். இவர்களுடன் இணைந்து விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் சில ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். அதனால் இங்கு விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு என்றார். 

ADVERTISEMENT

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து மலிங்கா விலகியதையடுத்து ஜேம்ஸ் பேட்டின்சனை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Tags : James Pattinson Bumrah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT