செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு கரோனா பாதிப்பு

16th Sep 2020 12:10 PM

ADVERTISEMENT

 

வங்கதேச கிரிக்கெட் வீரர் சயிஃப் ஹஸனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் இறுதியில் இலங்கையில் டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 27 பேர் கொண்ட ஆரம்பக்கட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சயிஃப் ஹசன் தேர்வாகவில்லை. 

7 நாள்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட சயிஃப் ஹனுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனாவிலிருந்து சயிஃப் ஹசன் குணமாகிவிட்டால் வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அறியப்படுகிறது. 

21 வயது சயிஃப் இதுவரை 2 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT