செய்திகள்

ஐபிஎல்: சிஎஸ்கே அணியின் சீனியர் சிட்டிசன்கள்!

15th Sep 2020 01:28 PM

ADVERTISEMENT

 

இந்த வாரம் முதல் ஐபிஎல் போட்டி தொடங்குகிறது.

செப்டம்பர் 19 அன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டி20 ஆட்டம் இளைஞர்களுக்கானது என்பது 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நிரூபித்தது தோனி தலைமையிலான இந்திய அணி. சச்சின், கங்குலி, டிராவிட் என மூத்த வீரர்கள் இல்லாமல் இளைஞர்களை மட்டுமே கொண்ட இந்திய அணி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.

ADVERTISEMENT

ஆனால் அதே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தான் டி20 ஆட்டத்துக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதையும் கடந்த இரு வருடங்களாக நிரூபித்து வருகிறது. 2018-ல் ஐபிஎல் சாம்பியன் ஆன சிஎஸ்கே அணி கடந்த வருடம் மும்பைக்கு எதிரான இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் 2020 போட்டியில் விளையாடவுள்ள சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்கள் யார் யார்?

தோனி - 38 வயது
வாட்சன் - 38 வயது
டு பிளெசிஸ் - 35 வயது
டுவைன் பிராவோ - 36 வயது
இம்ரான் தாஹிர் - 40
அம்பட்டி ராயுடு - 34
கெதர் ஜாதவ் - 34

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள சிஎஸ்கே வீரர்களான சுரேய் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு முறையே 33, 40 வயது ஆகிவிட்டன. இருவரும் சிஎஸ்கே அணியில் இந்த வருடம் விளையாடியிருந்தால் 11 பேரில் 9 பேர் 33 வயதைக் கடந்தவர்களாக இருந்திருப்பார்கள். அந்த ஒரு தருணம் இந்த வருடம் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது.  

சீனியர் சிட்டிசன்களைக் கொண்ட அணி என்று பலர் கேலி, விமர்சனங்கள் செய்தாலும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளதே சிஎஸ்கேவுக்குப் பல சமயங்களில் கைகொடுத்துள்ளது. அதனால்தான் கடந்த இரு வருடங்களிலும் அதன் பேர், புகழ், சாதிக்கும் முனைப்பு போன்றவை துளியும் குறையவில்லை.

இளைஞர்களைக் கொண்டு மட்டுமல்ல 33 வயதைக் கடந்த வீரர்களைக் கொண்டும் தோனியால் சாதிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT