செய்திகள்

கடைசி செட் டை பிரேக்கரில் அலெக்சாண்டர் வெர்வை வீழ்த்தி யு.எஸ். ஓபன் பட்டம் வென்ற டொமினிக் தீம்

14th Sep 2020 10:49 AM

ADVERTISEMENT

 

கடைசி செட் டை பிரேக்கரில் அலெக்சாண்டர் வெர்வை வீழ்த்தி யு.எஸ். ஓபன் பட்டம் வென்றுள்ளார் டொமினிக் தீம்.

நேற்று நடைபெற்ற யு.எஸ். ஓபன் பட்டம் இறுதிச்சுற்றில் டொமினிக் தீம் - அலெக்சாண்டர் வெர்வ் ஆகிய இருவரும் மோதினார்கள். முதல் இரு செட்களையும் 6-2, 6-4 என அலெக்சாண்டர் வெர்வ் வென்றார். எனினும் அடுத்த இரு செட்களையும்  6-4, 6-3 என வென்றதால் ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் சென்றது. 

கடைசி செட் டை பிரேக்கர் வரைக்கும் போனதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமானார்கள். டை பிரேக்கரில் கவனமாக விளையாடினார் தீம். இறுதியில் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என இறுதிச்சுற்றை வென்று யு.எஸ். ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் டொமினிக் தீம். 

ADVERTISEMENT

யு.எஸ். ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றின் கடைசி செட் முதல்முறையாக டை பிரேக்கர் வரை சென்றுள்ளது. 

Tags : US Open Thiem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT