செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே மீண்டும் நியமனம்

14th Sep 2020 10:26 AM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும் விளம்பரத் தூதராகவும் ஷேன் வார்னே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இணைந்து பணியாற்றுவார்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 7-ம் இடம் பிடித்தது ராஜஸ்தான் அணி. செப்டம்பர் 22 அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது.

Tags : Shane Warne
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT