செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குத் தயாராக ஐபிஎல் உதவும்: இயன் சேப்பல்

14th Sep 2020 11:53 AM

ADVERTISEMENT

 

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்கு ஐபிஎல் போட்டி மிகவும் உதவும் என இயன் சேப்பல் கூறியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் ஐபிஎல் போட்டி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சேப்பல் கூறியதாவது:

ஐபிஎல்-லில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்களும் சில ஆஸ்திரேலிய வீரர்களும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பு ஒரு சவாலாக கிரிக்கெட் ஆட்டங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்கு ஐபிஎல் போட்டி சரியாக இருக்காது என்றாலும் 2009-ல் ரவி பொபாரா சொன்னதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். 

2009-ல் பஞ்சாப் அணிக்காக ஐந்து ஆட்டங்களில் விளையாடிய பொபாரா, மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்குச் சென்றார். ஐபிஎல் போட்டியில் ரன்கள் எடுக்க முயற்சி செய்வதால் டெஸ்ட் தொடரில் ஈடுபாட்டுடன் விளையாட முடிந்தது என்றார். அடுத்தடுத்து இரு டெஸ்ட் சதங்கள் அடித்தார். இந்திய வீரர்களும் இந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளலாம். இது டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

Tags : Test series Chappell
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT