செய்திகள்

144/2 நிலையிலிருந்து 207 ரன்களுக்குச் சுருண்ட ஆஸ்திரேலியா: 2-ம் ஒருநாள் ஆட்டத்தை வென்ற இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

14th Sep 2020 11:22 AM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ம் ஒருநாள் ஆட்டத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்தில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. 2-ம் ஒருநாள் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.

பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. ஒரு பேட்ஸ்மேனாலும் அரை சதத்தை அடிக்க முடியாமல் போனது. ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 31-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தது. லபுசானே 48 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கேப்டன் ஃபிஞ்ச் 73 ரன்கள் எடுத்தார். மிகச்சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியை 48.4 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருட்டியது இங்கிலாந்து அணி. இதனால் 2-ம் ஒருநாள் ஆட்டத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்ச்சர், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

3-ம் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT