செய்திகள்

பயிற்சியைத் தொடங்கினார் கரோனாவிலிருந்து குணமான சிஎஸ்கே வீரர் தீபக் சஹார்!

11th Sep 2020 05:40 PM

ADVERTISEMENT

 

கரோனாவிலிருந்து குணமான சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், இதர வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ADVERTISEMENT

இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த இரு வீரர்கள் தவிர மற்ற சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், குணமடைந்துள்ளார். இதையடுத்து அணியினருடன் அவர் இணைந்துள்ளார். சில பரிசோதனைகளுக்குப் பிறகு பயிற்சியைத் தொடங்க தீபக் சஹாருக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார் தீபக் சஹார்.

Tags : BCCI Deepak Chahar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT