செய்திகள்

முதல் ஆட்டத்தில் மும்பையுடன் மோதல்: சென்னை அணியின் முழு அட்டவணை

6th Sep 2020 07:21 PM

ADVERTISEMENT


ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையையும், கடைசி ஆட்டத்தில் பஞ்சாபையும் எதிர்கொள்கிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டது. சென்னை அணியில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, முதல் ஆட்டத்தில் சென்னை அணி விளையாடுவது கேள்விக்குள்ளானது. இதனால், சென்னை அணியின் மற்ற வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட 3 பரிசோதனைகளில் மற்ற வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதன்பிறகு, சென்னை அணி பயிற்சியைத் தொடங்கியது.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. திட்டமிட்டபடி முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அட்டவணை: இங்கே க்ளிக் செய்யவும்..
 

ADVERTISEMENT
ADVERTISEMENT