செய்திகள்

ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங் விளையாடுவாரா?

DIN

சில வெளிநாட்டு வீரர்களைத் தவிர அனைத்து சிஎஸ்கே வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இன்று முதல் அனைவரும் பயிற்சியில் பங்கேற்கவுள்ளார்கள்.

சிபிஎல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சில வீரர்கள் தவிர அனைத்து சிஎஸ்கே வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார்கள். எனினும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மட்டும் இந்தியாவிலிருந்து இன்னும் புறப்படாமல் உள்ளார். 

ஹர்பஜன் சிங்கின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் ஹர்பஜன் சிங்கின் பயணத் திட்டங்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா, திடீரென ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இதனால் ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இரு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியிலிருந்து ஹர்பஜனும் விலக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுபற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் பங்கேற்பது பற்றிய சமீபத்திய தகவல் எதுவும் என்னிடம் இல்லை என்றார். 

சமீபத்தில் காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், செப்டம்பர் முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஹர்பஜன் சிங் வரவுள்ளதாகக் கூறினார். 

2018-ல் ரூ. 2 கோடிக்கு ஹர்பஜன் சிங்கை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 11 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT