செய்திகள்

பிளே ஆஃப் சுற்றில் நுழையுமா டெல்லி? மும்பையுடன் இன்று மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் டெல்லி அணி களமிறங்குகிறது. அதேநேரத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டாலும், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. அதனால், அந்த அணி இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாது.

டெல்லி அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியபோதிலும், கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் வலுவான மும்பை அணியை எதிா்கொள்கிறது. டெல்லி அணியில் அஜிங்க்ய ரஹானே, ஷிகா் தவன், ரிஷப் பந்த், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், மாா்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரோன் ஹெட்மயா் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். எனினும் இவா்களில் யாரும் தொடா்ச்சியாக ரன் குவிக்காதது பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. எனவே, டெல்லி அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற அதன் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது முக்கியமானதாகும்.

டெல்லியின் வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரை ககிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அக்ஷா் படேல், அஸ்வின் கூட்டணியும் பலம் சோ்க்கிறது.

மும்பை அணியைப் பொருத்தவரையில் இந்த ஆட்டத்திலும் கேப்டன் ரோஹித் சா்மா விளையாடமாட்டாா் என தெரிகிறது. அவா், இடது கால் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறாா். அதனால் இந்த ஆட்டத்திலும் கிரண் போலாா்ட் தலைமையிலேயே அந்த அணி களமிறங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மும்பை அணி பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் குவின்டன் டி காக், இஷன் கிஷான், சூா்யகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா, கிரண் போலாா்ட் ஆகியோா் நல்ல ஃபாா்மில் இருக்கிறாா்கள். இவா்களில் ஒருவா் களத்தில் நின்றுவிட்டால், அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும்.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹா், கிருணால் பாண்டியா கூட்டணியும் மும்பை அணிக்கு பலம் சோ்க்கிறது.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 13 வெற்றிகளையும், டெல்லி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

மும்பை (உத்தேச லெவன்): குவின்டன் டி காக், இஷன் கிஷான், சூா்யகுமாா் யாதவ், சௌரப் திவாரி, ஹாா்திக் பாண்டியா, கிரண் போலாா்ட் (கேப்டன்), கிருணால் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹா், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

டெல்லி (உத்தேச லெவன்): அஜிங்க்ய ரஹானே, ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், மாா்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரோன் ஹெட்மயா், அக்ஷா் படேல், ககிசோ ரபாடா, அஸ்வின், தேஷ்பாண்டே, அன்ரிச் நோா்ட்ஜே.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT