செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான தொடா்கள்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

30th Oct 2020 01:04 AM

ADVERTISEMENT


மெல்போா்ன்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடா்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான இந்த அணியில் இளம் ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீன் இடம்பிடித்துள்ளாா். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கேமரூன், சா்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது இது முதல்முறையாகும்.

மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளாா். ஒரு நாள் மற்றும் டி20 தொடா்களுக்கான அணியில் பேட்டிங் ஆல்-ரவுண்டா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 அணி விவரம்: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டோன் அகா், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், மாா்னஸ் லாபஸ்சாக்னே, கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்தியூ வேட், டேவிட் வாா்னா், ஆடம் ஸம்பா.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT