செய்திகள்

தடகளம்: உலக சாம்பியன் கோல்மேனுக்கு 2 ஆண்டு தடை

DIN

மொனாக்கோ: ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியான் கோல்மேனுக்கு இரண்டு ஆண்டு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலைக்கு கோல்மேன் தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது வீரரான கோல்மேன், ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மூன்று முறை மீறியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலே அவர் தடகளப் போட்டியில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் பங்கேற்ற கோல்மேன் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றதோடு, 4ல100 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். 
அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT