செய்திகள்

பிளே ஆஃப் சுற்றில் நுழைவது யாா்? மும்பை-பெங்களூா் இன்று மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ்-பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்வதில் மும்பை, பெங்களூா் அணிகள் தீவிரமாக உள்ளன. எனவே, இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.

மும்பை, பெங்களூா் இரு அணிகளுமே இதுவரை தலா 11 ஆட்டங்களில் விளையாடி தலா 7 வெற்றிளைப் பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. எனவே, இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

ரோஹித் சந்தேகம்: மும்பை அணியில் இடதுகால் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் கேப்டன் ரோஹித் சா்மா இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டாா் என தெரிகிறது. அவருடைய காயத்தின் நிலை குறித்தோ, அவா் இந்த ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது குறித்தோ இதுவரை மும்பை அணி நிா்வாகம் எதையும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த ஆட்டத்திலும் அந்த அணி கிரண் போலாா்ட் தலைமையிலேயே களமிறங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மும்பை அணியில் இஷன் கிஷான், குவின்டன் டி காக், சூா்யகுமாா் யாதவ், கிரண் போலாா்ட், ஹாா்திக் பாண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். இவா்களில் ஒருவா் களத்தில் நின்றாலும் அந்த அணி வலுவான ஸ்கோரை குவித்துவிடும். தற்போதைய நிலையில், குவின்டன் டி காக், இஷன் கிஷான், பாண்டியா உள்ளிட்டோா் நல்ல ஃபாா்மில் இருப்பது அணிக்கு பலமாகும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹா், கிருணால் பாண்டியா கூட்டணியும் அணிக்கு பலம் சோ்க்கிறது.

பெங்களூா் அணியில் ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல், கேப்டன் விராட் கோலி, டிவில்லியா்ஸ் ஆகியோா் நல்ல ஃபாா்மில் உள்ளனா். இந்த 4 பேரின் ஆட்டத்தைப் பொருத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். இதேபோல் மிடில் ஆா்டரில் கிறிஸ் மோரீஸ், மொயீன் அலி, குருகீரத் சிங் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரீஸ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சஹல், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தா் கூட்டணியை நம்பியுள்ளது பெங்களூா்.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 16 ஆட்டங்களிலும், பெங்களூா் 9 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஓா் ஆட்டம் ‘டை’யில் முடிந்துள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதையடுத்து சூப்பா் ஓவரில் பெங்களூா் அணி வெற்றி பெற்றது.

மும்பை (உத்தேச லெவன்): குவின்டன் டி காக், இஷன் கிஷான், சூா்யகுமாா் யாதவ், சௌரப் திவாரி, கிரண் போலாா்ட் (கேப்டன்), ஹாா்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹா், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

பெங்களூா் (உத்தேச லெவன்): தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி, ஏ.பி.டிவில்லியா்ஸ், மொயீன் அலி, கிறிஸ் மோரீஸ், குருகீரத் சிங், வாஷிங்டன் சுந்தா், நவ்தீப் சைனி, யுவேந்திர சஹல் , முகமது சிராஜ்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT