செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்: மெல்போர்ன் மைதானத்தில் 25,000 பார்வையாளர்களுக்கு அனுமதி

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டத்துக்கு 25,000 பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறார்கள். இரு அணிகளும் தலா மூன்று ஒருநாள், டி20 தொடர்களிலும் நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் விளையாடுகின்றன. இத்தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

டிசம்பர் 17-21 வரை அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 19 அன்று இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் முடிவடைகிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிசம்பர் 26-30 வரை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் ஆட்டத்தில் 25,000 பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க மெல்போர்ன் கிரிக்கெட் கிளப், கிரிக்கெட் ஆஸ்திரேலியா,  விக்டோரியா அரசு ஆகிய மூன்று அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. கரோனா அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் நடைபெறும் சில தினங்களுக்கு முன்பு பார்வையாளர்களின் துல்லியமான எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT