செய்திகள்

இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி: ஆஸ்திரேலிய தொடர்களுக்கான அணி அறிவிப்பு

26th Oct 2020 09:06 PM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (திங்கள்கிழமை) அறிவித்தது.

இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் வருண் சக்கரவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் சீசனில் அசத்தி வரும் வருண் சக்கரவர்த்தி தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், அவர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இதனால், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். டி20யில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பந்த் இல்லை, டெஸ்ட் அணியில் மட்டும் அவர் இடம்பெற்றுள்ளார்.

இதுதவிர கூடுதல் பந்துவீச்சாளர்களாக கம்லேஷ் நாகர்கோடி, கார்த்திக் தியாகி, இஷன் போரெல் மற்றும் டி. நட்ராஜன் ஆகியோர் இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவின் காயம் குறித்து பிசிசிஐயின் மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி

ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ்

Tags : BCCI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT