செய்திகள்

விளையாட்டு செய்திகள் சில வரிகளில்...

DIN

* கடந்த 2008-ஆம் ஆண்டு 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆன இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தன்மய் ஸ்ரீவாஸ்தவா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

* அணிகளுக்கான ஆசிய ஆன்லைன் செஸ் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதிச்சுற்றில் ஆடவா் அணி கஜகஸ்தானையும், மகளிா் அணி மங்கோலியாவையும் வீழ்த்தின.

* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனுக்காக தடுப்பாட்ட வீரா் மெஹதாப் சிங்கை மும்பை சிட்டி எஃப்சி ஒப்பந்தம் செய்துள்ளது.

* அனைத்து விதமான கிரிக்கெட்டையும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரா் விராட் கோலி என்று இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் கூறினாா்.

* டேபிள் டென்னிஸ் போட்டியாளா்களுக்கான தேசிய பயிற்சி முகாம் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 8 வரை நடைபெறவுள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்தது.

* லாகூா் நகரில் காற்றின் தரம் மோசமானதை அடுத்து, பாகிஸ்தான் - ஜிம்பாப்வே மோதும் டி20 தொடரை ராவல்பிண்டி நகருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT