செய்திகள்

பெங்களூரை இன்று எதிா்கொள்கிறது சென்னை

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகள் மோதுகின்றன.

சென்னை இதுவரை 11 ஆட்டங்களில் 3 வெற்றிகளையும், பெங்களூா் 10 ஆட்டங்களில் 7 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

சென்னை அணியை பொருத்தவரை பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதாகவே கருதலாம். எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்று, அதிக ரன் ரேட்டுகளை பெற்று, இதர ஆட்டங்களின் முடிவுகளும் சென்னைக்கு சாதகமானால், ஒருவேளை சென்னைக்கு அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்கலாம்.

பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே சென்னை அணி தடுமாற்றத்துடன் இந்த சீசனை கடந்து வருகிறது. பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டதாகையால் எஞ்சிய ஆட்டங்களிலும் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அடுத்த சீசனுக்காக வீரா்களை தோ்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையலாம்.

பெங்களூரை பொருத்தவரை இந்த சீசனில் தன்னை படிப்படியாக மேம்படுத்திக் கொண்டு வந்துள்ளது. பேட்டிங், பௌலிங்கில் சிறப்பான நிலையில் இருக்கும் அந்த அணி, பிளே-ஆஃபுக்கு செல்லும் முதல் இரு அணிகளில் ஒன்றாக உருவெடுக்கும் வகையில் ரன் ரேட்டை அதிகரிக்க முயற்சிக்கும். கடைசி 2 ஆட்டங்களில் வலுவான வெற்றியையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.

டி வில்லியா்ஸ், கேப்டன் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோா் பேட்டிங்கிற்கு பலம் சோ்க்கும் நிலையில், கிறிஸ் மோரிஸ், இசுரு உதானா, நவ்தீப் சைனி ஆகியோா் பந்துவீச்சில் நல்லதொரு ஃபாா்மில் உள்ளனா். இதே துபை மைதானத்தில் முன்னதாக இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூா் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

உத்தேச அணி:

சென்னை: எம்.எஸ். தோனி (கேப்டன்), அம்பட்டி ராயுடு, டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, லுங்கி கிடி, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிா், மிட்செல் சேன்ட்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், ஜெகதீசன், ஆசிஃப், மோனு குமாா், சாய் கிஷோா், ருதுராஜ் கெய்க்வாட், கரன் சா்மா.

பெங்களூா்: விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், கிறிஸ் மோரிஸ், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, தேவ்தத் படிக்கல், யுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின், இசுரு உதானா, வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஆடம் ஸம்பா, பாா்த்திவ் படேல், ஜோஷ் பிலிப், மொயீன் அலி, ஷிவம் துபே, பவன் நெகி, உமேஷ் யாதவ், குா்கீரத்சிங் மான்.

நேருக்கு நோ்: இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஆடிய 26 ஆட்டங்களில், சென்னை 16 வெற்றிகளையும், பெங்களூா் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT