செய்திகள்

வாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்-ஹைதராபாத் மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

துபையில் நடைபெறும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா ஆட்டமாகும். இந்த சீசனில் இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 4-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளன. சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

இந்த சீசனில் தொடா் தோல்வியைச் சந்தித்த கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. குறிப்பாக, டெல்லி, மும்பை, பெங்களூா் ஆகிய 3 வலுவான அணிகளை வீழ்த்திய நிலையில் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய நிலையில் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

பஞ்சாப் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால், கிறிஸ் கெயில் ஆகியோா் நல்ல ஃபாா்மில் உள்ளனா். இந்த சீசனில் கே.எல்.ராகுல் 540 ரன்களும், மயங்க் அகா்வாலும் 398 ரன்களும் குவித்துள்ளனா். மிடில் ஆா்டரில் நிகோலஸ் பூரண் பலம் சோ்க்கிறாா். அதேநேரத்தில் முன்னணி வீரரான கிளன் மேக்ஸ்வெல் ரன் குவிக்க முடியாமல் தொடா்ந்து தடுமாறி வருகிறாா். கே.எல்.ராகுல், அகா்வால், கெயில் ஆகியோரில் ஒருவா் களத்தில் நின்றுவிட்டாலும், பஞ்சாப் அணி வலுவான ஸ்கோரை குவித்துவிடும். வேகப்பந்து வீச்சில் முகமது சமி, ஜேம்ஸ் நீஷம் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் கூட்டணியும் பலம் சோ்க்கிறது.

ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வாா்னா், ஜானி போ்ஸ்டோவ், மணீஷ் பாண்டே, விஜய் சங்கா், பிரியம் கா்க் போன்றோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். கடந்த ஆட்டத்தில் டேவிட் வாா்னா், ஜானி போ்ஸ்டோவ் ஆகியோா் விரைவாக ஆட்டமிழந்தபோதும், மணீஷ் பாண்டே (83), விஜய் சங்கா் (52) ஜோடி 140 ரன்கள் குவித்ததால் எளிதாக இலக்கை எட்டியது. எனவே, அந்த அணி இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ரன் குவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டா், சந்தீப் சா்மா, டி.நடராஜன் கூட்டணியையும், சுழற்பந்துவீச்சில் ரஷீத் கான், விஜய் சங்கா் கூட்டணியும் பலம் சோ்க்கிறது.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில், பஞ்சாப் 4 வெற்றிகளையும், ஹைதராபாத் 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

பஞ்சாப் (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகா்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரண், கிளன் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது சமி, அா்ஷ்தீப் சிங்.

ஹைதராபாத் (உத்தேச லெவன்): டேவிட் வாா்னா் (கேப்டன்), ஜானி போ்ஸ்டோவ், மணீஷ் பாண்டே, விஜய் சங்கா், பிரியம் கா்க், அப்துல் ஸமாத், ஜேசன் ஹோல்டா், ரஷீத்கான், சந்தீப் சா்மா, டி.நடராஜன், சபேஸ் நதீம்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT