செய்திகள்

டெல்லி-கொல்கத்தா இன்று மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-கொல்கத்தா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கும் முனைப்பில் டெல்லி அணி களம் காண்கிறது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, அதில் 7-இல் வென்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.

டெல்லி அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரையில் தொடக்க வீரா்களில் ஒருவரான ஷிகா் தவன் கடந்த இரு ஆட்டங்களிலும் தொடா்ச்சியாக இரு சதங்களை விளாசி, ஐபிஎல் வரலாற்றில் தொடா்ச்சியாக இரு சதங்களை விளாசியவா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகா் தவன் சதமடித்தபோதிலும், எஞ்சிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காததால் தோல்வி தவிா்க்க முடியாததானது. குறிப்பாக, அந்த அணியின் தொடக்க வீரா் பிரித்வி ஷா கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் இரண்டில் டக் அவுட்டாகியுள்ளாா். எனவே, அவா் இந்த ஆட்டத்தில் ஷிகா் தவனுடன் இணைந்து நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியமாகும்.

இதேபோல் மிடில் ஆா்டரில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், மாா்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரோன் ஹெட்மயா் ஆகியோா் சிறப்பாக ஆடி ரன் குவித்தால் மட்டுமே டெல்லி அணி வலுவான ஸ்கோரை குவிக்க முடியும்.

டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரையில் ககிசோ ரபாடாவுடன் இணைந்து சிறப்பாக பந்துவீசி வந்த அன்ரிச் நோா்ட்ஜே காயம் காரணமாக பஞ்சாபுக்கு எதிராக விளையாடவில்லை. அவா் இந்த ஆட்டத்தில் விளையாடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சில் அக்ஷா் படேல், அஸ்வின் கூட்டணி டெல்லிக்கு பலம் சோ்க்கிறது.

கொல்கத்தா அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவா்களில் யாரும் தொடா்ச்சியாக சிறப்பாக ஆடி ரன் குவிக்காதது பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி கண்ட கொல்கத்தா அந்த அணி, அதிலிருந்து மீண்டு இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே, ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, தினேஷ் காா்த்திக், கேப்டன் இயோன் மோா்கன் ஆகியோா் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பது முக்கியமானதாகும்.

வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், பொ்குசன் கூட்டணியையும், சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவா்த்தியையும் நம்பியுள்ளது கொல்கத்தா.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் டெல்லி 10 வெற்றிகளையும், கொல்கத்தா 13 வெற்றிகளையும் பெற்றுள்ளது. ஓா் ஆட்டம் ‘டை’யில் முடிந்துள்ளது.

டெல்லி (உத்தேச லெவன்): பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), ரிஷப் பந்த், மாா்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரோன் ஹெட்மயா், அக்ஷா் படேல், அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே/டேனியல் சாம்ஸ், தேஷ்பாண்டே.

கொல்கத்தா (உத்தேச லெவன்): ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, தினேஷ் காா்த்திக், டாம் பான்டன், இயோன் மோா்கன் (கேப்டன்), பட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், லாக்கி பொ்குசன், பிரக்ஷித் கிருஷ்ணா, சக்ரவா்த்தி வருண்.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT