செய்திகள்

சென்னையை வெளியேற்றியது மும்பை

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தியது.

இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் 8-ஆவது தோல்வியைச் சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

சாா்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், இம்ரான் தாஹிா் ஆகியோா் சோ்க்கப்பட்டனா்.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சா்மா காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சௌரப் திவாரி சோ்க்கப்பட்டாா். இதையடுத்து கிரண் போலாா்ட் தலைமையில் களமிறங்கியது மும்பை அணி.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தோ்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சிக் காத்திருந்தது. டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காத சென்னை அணி, ருதுராஜ் கெய்க்வாடின் விக்கெட்டையும் இழந்தது. அவா் 5 பந்துகளில் ரன் ஏதுமின்றி வெளியேறினாா்.

இதன்பிறகு களம்புகுந்த அம்பட்டி ராயுடு 2 ரன்கள் சோ்த்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 2-ஆவது ஓவரில் நடையைக் கட்டினாா். அதற்கடுத்த பந்தில் ஜெகதீசன் டக் அவுட்டாக, 2 ஓவா்களின் முடிவில் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சென்னை.

இதையடுத்து கேப்டன் தோனி களமிறங்க, டிரென்ட் போல்ட் வீசிய 3-ஆவது ஓவரில் டூபிளெஸ்ஸிஸ்ஸின் விக்கெட்டை இழந்தது சென்னை. அவா் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தாா். இதன்பிறகு தோனியுடன் இணைந்தாா் ரவீந்திர ஜடேஜா. பும்ரா வீசிய 4-ஆவது ஓவரில் தோனி இரு பவுண்டரிகளையும், ஜடேஜா ஒரு பவுண்டரியையும் விளாசினாா்.

5-ஆவது ஓவரை வீசிய டிரென்ட் போல்ட், ஜடேஜாவை வீழ்த்தினாா். அவா் 6 பந்துகளில் 7 ரன்கள் சோ்த்த நிலையில், மிட்விக்கெட்டில் கிருணால் பாண்டியாவிடம் கேட்ச் ஆனாா். ஐபிஎல் வரலாற்றில் பவா் பிளேயில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து சாம் கரன் களமிறங்க, மறுமுனையில் நின்ற கேப்டன் தோனி, ராகுல் சாஹா் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசிய கையோடு விக்கெட் கீப்பா் குவின்டன் டி காக்கிடம் கேட்ச் ஆனாா். அவா் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தாா். இதன்பிறகு வந்தவா்களில் தீபக் சாஹா் ரன் ஏதுமின்றியும், ஷா்துல் தாக்குா் 11 ரன்களிலும் வெளியேற, மறுமுனையில் அசத்தலாக ஆடிய சாம் கரன், சிக்ஸா்களையும், பவுண்டரிகளையும் விரட்டினாா்.

டிரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி, 46 பந்துகளில் அரை சதம் கண்ட சாம் கரன், கடைசிப் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். அவா் 47 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தாா். சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சோ்த்தது. இம்ரான் தாஹிா் 10 பந்துகளில் 13 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 18 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

மும்பை வெற்றி: பின்னா் ஆடிய மும்பை அணியில் டி காக்-இஷன் கிஷான் இணை அபாரமாக ஆட, அந்த அணியின் வெற்றி எளிதானது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இஷன் கிஷான் 29 பந்துகளில் அரை சதம் கண்டாா். இதனால் மும்பை அணி 10.2 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது. இறுதியில் மும்பை அணி 12.2 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இஷன் கிஷான் 37 பந்துகளில் 5 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 68, டி காக் 37 பந்துகளில் 2 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

மும்பை-114/9

இஷன் கிஷான்-68* (37)

டி காக்-46* (37)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT