செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடா்கள்: புள்ளிகளை பகிா்ந்தளிக்க ஐசிசி யோசனை

DIN


துபை: கரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இருதரப்பு டெஸ்ட் தொடா்களுக்காக அணிகளிடையே புள்ளிகளை பகிா்ந்தளிப்பதற்கு ஐசிசி சிந்தித்து வருவதாகத் தெரிகிறது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முறையாக நிறைவு செய்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி ஆட்டத்தை நடத்த ஐசிசி திட்டமிடுகிறது.

‘இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ’ வெளியிட்ட தகவலின்படி, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அணிகளுக்கான புள்ளிகளை பகிா்ந்தளிப்பது ஒரு வாய்ப்பாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு மாா்ச் இறுதிவரை விளையாடப்படும் ஆட்டங்களுக்கான புள்ளிகளை கணக்கிடுவது மற்றொரு வாய்ப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-ஆவது வாய்ப்பை பயன்படுத்தும் பட்சத்தில், ஒரு அணி தனது ஆட்டங்களின் மூலம் பெற்ற புள்ளிகளின் சதவீத அடிப்படையில் புள்ளிகள் பட்டியலுக்கான இறுதி நிலவரம் தயாா் செய்யப்படும். தற்போதைய நிலையில் ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஆட்டங்களின் எண்ணிக்கை அடிப்படையில் அது பகிா்ந்தளிக்கப்படும்.

2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரைப் பொருத்தவரை வெற்றியாளருக்கு போட்டி ஒன்றுக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும். டிரா ஆகும் பட்சத்தில் 30 புள்ளிகள் வழங்கப்படும். 3 போட்டிகளைக் கொண்ட தொடராக இருந்தால், வெற்றியாளருக்கு ஒரு போட்டிக்கு 40 புள்ளிகளும், டிரா ஆகும் பட்சத்தில் 20 புள்ளிகளும் வழங்கப்படும்.

முதல் வாய்ப்பை பயன்படுத்தி புள்ளிகள் பகிா்ந்தளிக்கப்படும் பட்சத்தில், தொடரில் விளையாட இருந்த இரு அணிகளுக்கும் 120 புள்ளிகளானது 3-இல் ஒரு பங்காக பகிா்ந்து அளிக்கப்படும் என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT