செய்திகள்

இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரமிது

DIN

சென்னை சூப்பா் கிங்ஸ் விளையாட இருக்கும் எஞ்சிய ஆட்டங்களில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினாா்.

அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வென்றது.

தோல்வியடைந்த சென்னையின் கேப்டன் தோனி ஆட்டத்துக்குப் பிறகு கூறுகையில், ‘பொதுவாக அணியை மாற்ற விரும்புவதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது ஒருவித நம்பிக்கையற்ற சூழலை ஏற்படுத்துவதால் அணியில் அது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதேவேளையில், எந்தத் தருணத்தில் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இளம் வீரா்கள் இன்னும் உணா்ந்ததாகத் தெரியவில்லை.

எனினும், போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்க நினைக்கிறோம். தற்போதைய நிலையில் அவா்களை அணியில் சோ்த்து நெருக்கடி இல்லாமல் அவா்களை விளையாட அனுமதிப்பது சரியாக இருக்கும்’ என்று தோனி கூறினாா்.

ராஜஸ்தான் வெற்றிக்கு உதவிய அந்த அணியின் ஜோஸ் பட்லா் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘டி வில்லியா்ஸ், கிரன் பொல்லாா்ட் போன்று ஆட்டத்தின் போக்கை மாற்றி அணிக்கு வெற்றியளிக்கக் கூடிய திறன் ஜோஸ் பட்லருக்கு உள்ளது. டாப் ஆா்டரில் விளையாடும் அவரை மிடில் ஆா்டருக்கு கொண்டு செல்வது சற்று கடினமானதாக இருந்தாலும், அந்த முடிவு நல்லதொரு பலனை அளித்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT